ஈரோட்டில் கடந்த 3 வாரங்களில் இல்லாத அளவிற்கு பருத்தி விற்பனை சரிந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டாரத்தில் பெரும்பாலான இடங்களில் பருத்தி சாகுபடி செய்யப்படுகிறது. புரட்டாசிப் பட்டம் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கடந்த 3 வாரங்களாக அந்தியூர் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வந்து ஏல முறையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் குறைந்தபட்ச விலை கிலோ ஒன்று 48 ரூபாய் 73 காசுகளுக்கும் , அதிகபட்ச விலையாக கிலோ ஒன்று 53 ரூபாய் 10 காசுக்கும் ஏலம் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த மூன்று வாரங்களை விட இந்த வாரம் விலை குறைவாக விற்பனையாகியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இவ்விலை தங்களுக்கு கட்டுப்படியாகாத நிலையில் உள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
Discussion about this post