நீலகிரி மாவட்டத்தில் பனி தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட, காய்கறி விவசாயத்தை நுண் தெளிப்பு பாசனத்தின் மூலம் விவசாயிகள் பாதுகாத்து வருகின்றனர்.
உதகை அருகே முத்தோரை மற்றும் நஞ்சநாடு கிராமங்களில் கேரட் மற்றும் பீட்ரூட் விவசாயம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த 2 மாதங்களாக அப்பகுதியில் பனியின் தாக்கத்தால் காய்கறி விவசாயமானது, கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதைத்தடுக்க விவசாயிகள் நவீன முறையான சொட்டு நீர் நுண் தெளிப்பு பாசன முறையை கையாளுகின்றனர். இந்த சொட்டு நீர் பாசனத்தின் மூலம் பனியின் தாக்கத்திலிருந்து விவசாயம் பாதுகாக்கப்படுவதோடு, நல்ல விளைச்சலும் கிடைக்கிறது என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
Discussion about this post