திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரதசப்தமி உற்சவத்தை முன்னிட்டு, மலையப்பசுவாமி சேஷ வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருப்பதி திருமலையில், ரதசப்தமி உற்சவத்தின் இரண்டாவது வாகன சேவையாக, ஏழுமலையானின் சின்ன சேஷ வாகன சேவை, காலை 8 மணி முதல் 10 மணி வரை நடைபெற்றது. சர்வ அலங்காரத்துடன் மலையப்ப சுவாமி தங்க சின்ன சேஷ வாகனத்தில் எழுந்தருளினார். மலையப்பசுவாமி வரும் போது யானைகள், குதிரைகள் ஆகியவை அணி வகுக்க, நான்மறை வேதங்கள் முழங்க, ஏழுமலையானின் சேஷ வாகன சேவை நடைபெற்றது. இதில் பல்லாயிரகணக்கான பக்தர்கள், கோவிந்தா, கோவிந்தா என்ற கோஷத்துடன் பெருமாளை வழிபட்டனர்.
Discussion about this post