சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த தொழிலதிபர் சண்முகம் என்பவர் தங்கள் நிலத்தை அபகரித்து விட்டதாக 50க்கும் மேற்பட்டவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்தவர் தொழிலதிபர் சண்முகம். தனியார் பேருந்து உரிமையாளரான இவர், நிதி நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். அந்த நிதி நிறுவனத்தில், சொத்தின் பேரில் கடன் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், கடன் தொகையை முழுவதுமாக செலுத்திய பின்பும், சொத்தை திருப்பி கேட்டால் தராமல் பினாமி பெயரில் கிரயம் செய்து அபகரித்து கொள்வதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, சங்ககிரியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள், தொழிலதிபர் சண்முகம் மற்றும் அவரது உறவினர்கள் 4 பேரும், தங்களது சொத்தை சட்டவிரோதமாக அபகரித்து கொண்டதாக கூறியும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும், மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
Discussion about this post