கொடநாடு விவகாரம் தொடர்பாக நேரில் ஆஜராகாததால் சயன், மனோஜ் ஆகிய இருவரையும் கைது செய்ய உதகை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொடநாடு கொலை விவகாரம் தொடர்பாக உதகை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து சயன், மனோஜ் ஆகிய இருவரையும் நேரில் ஆஜராக உதகை நீதி மன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து சயன், மனோஜ் ஆகிய இருவரும் சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இதனையடுத்து இருவருக்கும் ஜாமீன் வழங்கிய உயர்நீதிமன்றம், எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், சயன், மனோஜ் ஆகிய இருவரும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருவதாகவும், ஜாமீனை தவறான வழியில் பயன்படுத்துவதாகவும், எனவே இருவரின் ஜாமீன் மனுவையும் ரத்து செய்யும் படி உதகை நீதிமன்றத்தில் தமிழக அரசு மனுதாக்கல் செய்திருந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம், இருவரும் நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் சயன், மனோஜ் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகதால் தமிழக அரசின் நியாயமான வாதத்தை ஏற்ற நீதிமன்றம் ஜாமீனை ரத்து செய்து சயன், மனோஜ் உட்பட 4 பேரையும் கைது செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது. உத்தரவிட்டுள்ளது.
Discussion about this post