தனி வாரியம் அமைத்தல் உள்ளிட்ட சலுகைள், தமிழக அரசின் பட்ஜெட்டில் இடம் பெற வேண்டும் என எதிர்பார்ப்பதாக திருப்பூரைச் சேர்ந்த பின்னலாடை சங்கங்கள் கருத்து தெரிவித்துள்ளன. பின்னலாடை தொழில் துறையினருக்கு தனி வாரியம் அமைத்தல், மானியம், குறைந்த விலையில் மின்சாரம் போன்ற சலுகைகளை தமிழக அரசின் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டும் என எதிர்பார்ப்பதாக சைமா சங்க தலைவர் ஈஸ்வரன் கூறியுள்ளார்.
திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பின்னலாடை தொழிலில் தமிழக அரசு புதிய சலுகைகளை வழங்கிடும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
Discussion about this post