தன்னுடன் ஒரே மேடையில், 5 நிமிடம் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியால் விவாதம் செய்ய முடியுமா? என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சவால் விடுத்து உள்ளார்
டெல்லியில் காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சியில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடியுடன் நேருக்கு நேர் விவாதிக்க தான் தயாராக இருப்பதாக கூறியுள்ளார். ஆனால் பிரதமர் மோடி கோழை என்றும், 5 ஆண்டுகளாக அவரை தான் எதிர்த்து வருவதாகவும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
மோடி என்ற பிம்பம் முடிந்துவிட்டது என்றும் தோல்வி பயம் மோடியின் கண்களில் தெரிவதாகவும் ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார். மோடியின் பேச்சில் இருக்கின்ற தைரியம் நிஜத்தில் இல்லை என்பதை சீனா கண்டுபிடித்துவிட்டதாகவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
Discussion about this post