சின்னதம்பி யானை நடமாட்டம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க, கோவை தடாகம் பகுதியில் உள்ள செங்கற்சூளைகளை மூட நடவடிக்கை எடுக்க கோரி சென்னையைச் சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் . யானைகள் வழித்தடத்தில் இந்த செங்கற்சூளைகள் இருப்பதால், யானைகள் ஊருக்குள் நுழைந்து விடுவதாக மனுவில் குறிப்பிட்டுள்ள அவர், சின்னதம்பி யானையை பிடித்து முகாமில் வைக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சின்னதம்பியின் நடமாட்டம் குறித்து வரும் 11ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என வனத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்தனர்.
Discussion about this post