தருமபுரியில் புத்தாக்க அறிவியல் கண்காட்சியில் பள்ளி மாணவ, மாணவிகள் உருவாக்கிய அறிவியல் படைப்புகள் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கிடையே அறிவியல் ஆராய்சி மனப்பான்மையை வளர்க்கும் வகையில் தருமபுரி மாவட்ட அளவிலான புத்தாக்க அறிவியல் விருதுக்கான 2 நாள் கண்காட்சி நடைபெறுகிறது.
முதல் நாளான இன்று, தருமபுரி இலக்கியம்பட்டி மகளிர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கண்காட்சியை தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் துவக்கி வைத்தார். கண்காட்சியில் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தங்களின் அறிவியல் படைப்புகள் குறித்து செயல்விளக்கம் அளித்தனர்.
Discussion about this post