காட்டுயானை சின்னத்தம்பியை பத்திரமாக பிடிக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தியபிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், சின்னத்தம்பியை கும்கியாக மாற்றக் கூடாது என்ற பொதுமக்களின் கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும் என்று கூறினார்.
Discussion about this post