வாழை இலை விற்பனை அதிகரித்துள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ள மதுரை மாவட்ட விவசாயிகள், வாழை சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழகம் முழுவதும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு தமிழக அரசு தடைவிதித்தது. இதனால், உணவகங்கள், வீட்டு நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் வாழை இலையின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இந்த நிலையில், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் வாழை சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதித்த அரசிற்கு நன்றி தெரிவித்துள்ள விவசாயிகள், வாழை இலை விற்பனை அதிகரித்துள்ளதால் தங்கள் வாழ்வாதாரம் செழிப்படைந்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தனர்.
Discussion about this post