கன்னியாகுமரி கடற்கரை சாலை மற்றும் சன்னதி தெருவில் உள்ள ஆக்கிரமிப்புகளை அளவிடும் பணிகள் 2வது நாளாக நடைபெற்றது.
சர்வதேச சுற்றுலா தளமான கன்னியாகுமரியில் கடற்கரை சாலை, காமராஜர் மணிமண்டப சாலை, சன்னதி தெரு ஆகிய பகுதிகளில் நடைபாதையை ஆக்கிரமித்து பலர் கடைகளை அமைத்துள்ளனர். இக்கடைகளை அகற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டதையடுத்து துணை ஆட்சியர் பவன்குமார் முன்னிலையில் அதிகாரிகள், ஆக்கிரமித்து கட்டப்பட்ட இடங்களை அளவிட்டு வருகின்றனர். இதேபோல இந்து அறநிலைத்துறையின் இடங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கடைகளின் பகுதிகளை வருவாய் துறை அதிகாரிகள் முன்னிலையில் மஞ்சள் நிற பெயிண்ட்டால் குறிக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த பணிகள் முடிந்தபின் அளவீடு செய்து குறிக்கப்பட்ட இடங்களை இடிக்கும் பணி நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Discussion about this post