கடந்த 8 ஆண்டுகளில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 33 ஆயிரத்து 300 ஏழை பெண்களுக்கு 133 கோடியே 24 லட்சம் மதிப்பில் திருமண நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 2011-12ம் நிதியாண்டு முதல் 2017-18 நிதியாண்டு வரை 10ம் வகுப்பு படித்த 11 ஆயிரத்து 414 ஏழைப்பெண்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் வீதம் 28 கோடியே 53 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் திருமண நிதியுதவி மற்றும் தலா 4 கிராம் வீதம் 45 ஆயிரத்து 656 கிராம் தாலிக்கு தங்கமும்
பட்டம் படித்த 15 ஆயிரத்து 141 ஏழைப் பெண்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வீதம் 75 கோடியே 70 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் திருமண நிதியுதவி மற்றும் தலா 4 கிராம் வீதம் 60 ஆயிரத்து 564 கிராம் தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல், 2016-17ம் நிதியாண்டு முதல் 2017-18ம் நிதியாண்டு வரை 10ம் வகுப்பு படித்த 850 ஏழைப்பெண்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் வீதம் 2 கோடியே 12 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் திருமண நிதியுதவி மற்றும் தலா 8 கிராம் வீதம் 6 ஆயிரத்து 800 கிராம் தாலிக்கு தங்கமும்
பட்டம் படித்த 2 ஆயிரத்து 31 ஏழை பெண்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வீதம் 10 கோடியே 15 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் திருமண நிதியுதவி மற்றும் தலா 8 கிராம் வீதம் 60 ஆயிரத்து 564 கிராம் தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டுள்ளது.
Discussion about this post