திருப்பதி புத்தூர் வனப்பகுதியில் கடத்தலுக்கு தயார் நிலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மர கட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆந்திர மாநிலம் சித்தூர் அருகேயுள்ள புத்தூர் வனப்பகுதியில் செம்மரக்கட்டைகளை கடத்துவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி புத்தூர் அருகே உள்ள வனப்பகுதியில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது கடத்துவதற்கு தயார் நிலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இரண்டு டன் எடையுள்ள 151 செம்மர கட்டைகள் இருப்பதை வனத்துறையினர் கண்டுபிடித்தனர். இதன் மதிப்பு ஒரு கோடி ரூபாய் இருக்கும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றை பறிமுதல் செய்ததுடன் தலைமறைவான இருவரை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Discussion about this post