சென்னையில் பிரபல நிறுவனங்களில் 2வது நாளாகவும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை மற்றும் கோவையில் உள்ள பிரபல வணிக நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில், வரி ஏய்ப்பு செய்ததாக சுமார் 15 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அதிகாரிகள் ஆவணங்களை கணக்கிடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இச்சோதனையில், 700 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டனர். திமுகவை சேர்ந்த முக்கிய பிரமுகரின் மகனான கார்த்திக் பங்குதாரராக உள்ள நிறுவனத்தில் நடந்த வரி ஏய்ப்பு தொடர்பாகவும் அவரிடம் விசாரணை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது 2 வது நாளாகவும் சோதனை நடைபெற்று வருகிறது.
Discussion about this post