கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா மீது எந்த தவறும் இல்லை என்று சம்மந்தப்பட்ட பெண் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
மைசூர் அருகே வருணா என்ற இடத்தில் நடந்த பொது நிகழ்ச்சியில், பெண் ஒருவர் சித்தராமையாவிடம் தொடர்ந்து கேள்வி எழுப்பியதால், ஆவேசமடைந்த சித்தராமையா பெண்ணிடம் இருந்து கோபத்துடன் மைக்கை வாங்கினார் . இந்த சம்பவம் சர்ச்சையை கிளப்பியது. இச்சம்பவத்திற்கு தற்போது அந்த பெண் விளக்கமளித்துள்ளார். ஜமாலா என்ற அந்த பெண், சித்தராமையாவிடம் தான் முரட்டுத்தனமாக பேசியதாக கூறியுள்ளார். மேஜையை தட்டி பேசியதால் அவர் கோபமடைந்ததாக அந்த பெண் விளக்கமளித்தார். ஜமாலாவை தமக்கு 15 ஆண்டுகளுக்கு மேலாகத் தெரியும் என்று குறிப்பிட்ட சித்தராமையா, நடந்த சம்பவம் தற்செயலானது என்று விளக்கமளித்திருக்கிறார்.
Discussion about this post