ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி போட்டியில், செர்பியாவின் ஜோகோவிச்சை ஸ்பெயினின் நடால் இன்று எதிர்கொள்கிறார். ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி போட்டி இன்று நடைபெற உள்ளது. உலக தர வரிசையில் முதலிடத்தில் இருப்பவரும் செர்பிய வீரருமான நோவக் ஜோகோவிச்சை 2 ஆம் நிலை வீரரும் ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவருமான ரஃபேல் நடால் எதிர்கொள்கிறார்.
அரையிறுதியில் லுகாஸ் பவுலியை வீழ்த்திய ஜோகோவிச்சும், சிட்சிபஸை வீழ்த்திய நடாலும், இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளனர். கடந்த ஆண்டு நடந்த ஆஸ்திரேலிய ஓபனில் ஜோகோவிச்சும், நடாலும் 4 ஆம் சுற்றோடு வெளியேறினர்.
தற்போது நடப்புத் தொடரில் இரு முன்னனி வீரர்களும் இறுதி போட்டியில் விளையாடுவதால் இப்போட்டி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில் சாம்பியன் பட்டம் வெல்பவருக்கு சுமார் 21 கோடி ரூபாயும், 2 ஆம் இடம் பிடிப்பவருக்கு சுமார் 11 கோடி ரூபாயும் பரிசு தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post