கன்னியாகுமரியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள திருமலை திருப்பதி வெங்கடாசலபதி கோயில் கும்பாபிஷேக விழா யாகசாலை பூஜைகளுடன் துவங்கியுள்ளது. கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா கடற்கரை வளாகத்தில் ஐந்தரை ஏக்கர் நிலப்பரப்பில் இருபத்து இரண்டரை கோடி ரூபாய் மதிப்பில் பிரமாண்டமான முறையில் திருப்பதி வெங்கடாசலபதி கோயில் கட்டப்பட்டுள்ளது. இங்கு வெங்கடாசலபதி, பத்மாவதி, ஆண்டாள் மற்றும் கருடாழ்வாருக்கென தனித்தனியாக சன்னிதிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் சீனிவாச கல்யாண மண்டபம், தியான மண்டபம், அன்னதானக்கூடம் உள்ளிட்ட மண்டபங்களும் கட்டப்பட்டுள்ளன.
இந்த வெங்கடாசலபதி கோவிலுக்கு வருகிற 27ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி யாகசாலை பூஜைகள் தொடங்கியுள்ளது. இதற்கென கோயிலில் 16 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. யாகசாலை பூஜையையொட்டி அங்குரார்ப்பணம், வேதாரம்பம் போன்றவை நடைபெற்றது.
Discussion about this post