தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஏப்ரல் 24 ம் தேதிக்குள் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதிமுக அரசுக்கு எதிராக செயல்பட்ட 18 எம் எல் ஏ க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டிருந்தார். இது தொடர்பாக 18 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தனர். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் சபாநாயகரின் உத்தரவு செல்லும் என அதிரடியாக தீர்ப்பளித்தது. இந்த நிலையில் திருமங்கலத்தை சேர்ந்த வேதா என்ற தாமோதரன் என்பவர், 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார்.
இன்று நடைபெற்ற விசாரணையின் போது இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தேர்தல் நடத்துவதற்கு ஏப்ரல் 24 வரை அவகாசம் உள்ளதாகவும் அதற்குள் முடிவு எடுகக்கப்படும் எனத் தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்ற மதுரைக்கிளை வழக்கை முடித்து வைப்பதாக அறிவித்தது.
Discussion about this post