நாட்டு இன மாடுகளின் உற்பத்தியை பெருக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருவதாக கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் அலகுமலை பகுதியில் வரும் 3 ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ளது. இதற்காக ஜல்லிக்கட்டு மைதானத்தில் நடைபெற்றுவரும் முன்னேற்பாடுகள் பணிகளை கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார்.
முன்னதாக அலகுமலை முத்துக்குமார சுவாமி கோயிலில் தைப்பூச திருத்தேர் விழாவினை வடம் பிடித்து துவக்கி வைத்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டு இன மாடுகளின் உற்பத்தியை பெருக்கும் வகையில் பவானிசாகர் ஆற்றங்கரையோர பகுதியில் 200 ஏக்கர் பரப்பளவில், 3 கோடி செலவில் உற்பத்தி மையம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக கூறினார்.
Discussion about this post