இலங்கை சென்ற இந்திய மீட்புக்குழுவினர் ராமேஸ்வரம் மீனவர்களுக்கு சொந்தமான ஒன்பது படகுகளை மீட்டனர். இன்று மாலை அவர்கள் ராமேஸ்வரம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராமேஸ்வரத்திலிருந்து கடந்த 17ந் தேதி 9 படகுகளில் 71 பேர் கொண்ட மீட்புக் குழுவினர் இலங்கை சென்றனர். இவர்கள் ,காரைநகர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களுக்கு சொந்தமான 9 படகுகளை மீட்டனர். பின்னர் இலங்கை கடற்படை அதிகாரிகளின் சோதனைக்குப்பின் ராமேஸ்வரம் நோக்கி புறப்பட்டனர். அவர்கள் இன்று மாலை கரை திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, எல்லை தாண்டி வந்ததாக கூறி பறிமுதல் செய்யப்பட்ட 157 படகுகளை இலங்கை நீதிமன்றம் அண்மையில் விடுவித்தது. இதில், புதுக்கோட்டை மீனவர்களுக்கு சொந்தமான 5 படகுகளை மீட்க 21 மீனவர்கள் அடங்கிய மீட்புக்குழு 2ம் கட்டமாக மண்டபத்தில் இருந்து இலங்கை புறப்பட்டு சென்றனர்.
Discussion about this post