கர்நாடகாவில் காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதா தளம் தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க போவதில்லை என மாநில பாஜக தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் நடைபெற்று வரும் காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சியை கவிழ்க்க, எம்.எல்.ஏ.க்கள் பேரத்தில் பாஜக ஈடுபட்டு வருவதாக அக்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. அதே வேளையில், தங்கள் எம்.எல்.ஏ.க்களை இழுக்க காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் முயல்வதாக பாஜகவின் கர்நாடக தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். இந்தநிலையில், பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, டெல்லியில் உள்ள பாஜக எம்.எல்.ஏ.க்கள் பெங்களூரு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வறட்சி குறித்து ஆய்வு செய்யபோவதாகவும் அவர் குறிப்பிட்டார். எந்த நிலையிலும் தாங்கள், ஆட்சியை கவிழ்க்க மாட்டோம் என்றும் காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியினர் கவலைகொள்ள தேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
Discussion about this post