சென்னை வளசரவாக்கத்தில் நடைபெற்றுவரும் சுற்றுலா பொருட்காட்சியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் உற்சாகத்துடன் கண்டு களித்தனர்.
இந்த பொருட்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள மணல் சிற்பங்கள் அனைவரையும் கவர்ந்து வருகிறது.மேலும் பிரம்மாண்ட ராட்டினம் மற்றும் ஜெயண்ட் வீல் உள்ளிடட பொழுதுபோக்கு அம்சங்களில் அனைவரும் உற்சாகமாக பங்கேற்றனர். சிறுவர்களுக்கு புகைவண்டி உள்ளிட்ட பல்வேறு வகையான விளையாட்டுகளும் பொருட்காட்சியில் இடம்பெற்றிருந்தது.
Discussion about this post