சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா உட்பட 4 ஐபிஎஸ் அதிகாரிகள் சி.பி.ஐ. அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் சிபிஐ இயக்குநராக இருந்த அலோக் வர்மா, சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஆகியோருக்கு இடையேயான மோதல் போக்கு தேசிய அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே தீயணைப்பு துறைக்கு மாற்றம் செய்யப்பட்ட அலோக் வர்மா தனது பொறுப்பை ஏற்காமல் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்தநிலையில் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா, இணை இயக்குநர் ஏ.கே.ஷர்மா, டிஐஜி எம்.கே.சின்கா மற்றும் கண்காணிப்பாளர் ஜெயந்த் நாயக்நவாரே ஆகியோரை சிபிஐ-யிலிருந்து வெளியேற்றி மத்திய பணியாளர் பயிற்சித்துறை உத்தரவிட்டுள்ளது.
சிபிஐ இயக்குநரை தேர்வு செய்வதற்காக வரும் 24 ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக்குழு கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில் 4 உயர் அதிகாரிகள் சிபிஐ அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post