நாளை நடைபெறும் கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளாதவர்கள் மீது கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா எச்சரித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் நடைபெற்று வரும் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பாரதிய ஜனதா கட்சி முயற்சிப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் இழுக்க பா.ஜ.க குதிரை பேரத்தை மேற்கொண்டிருப்பதாக முதலமைச்சர் குமாரசாமி குற்றம்சாட்டி வருகிறார்.
இந்நிலையில், நாளை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளாத எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருக்கும் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளிலிருந்தும் அவர்கள் நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் கர்நாடகா அரசியலில் பரபரப்பு அதிகரித்துள்ளது.
Discussion about this post