ஜல்லிகட்டு நடைபெறும் மாவட்டங்களில் மாடுகளுக்கு தேவையான முழு பாதுகாப்பு வசதிகளும் தயார் நிலையில் உள்ளதாக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் உள்ள சிஞ்சு வாடி, கூழ நாய்க்கன் பட்டி, கோலார்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய தார் சாலைகள் அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது. அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜல்லிக்கட்டு நடைபெறும் மாவட்டங்களில் இணை இயக்குனர்கள் தலைமையில் 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Discussion about this post