போகி பண்டிகையில் பிளாஸ்டிக் உள்ளிட்ட பழைய பொருட்கள் எரிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியிருக்கிறது.
தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில், போகி பண்டிகையையொட்டி, பிளாஸ்டிக், பழைய டயர், ரசாயனம் கலந்த பொருட்களை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதாக கூறியுள்ளது. காற்றில் நுண் துகள்களின் அளவு, ஒரு கனமீட்டரில் 100 மைக்ரோகிராம் இருக்க வேண்டும். கடந்த ஆண்டு, 135 முதல் 386 மைக்ரோகிராம் வரை இருந்தது. அடர்ந்த புகையால் போக்குவரத்து சேவை பாதிக்கப்படுவதையும், நச்சு வாயுக்களால் மூச்சுத் திணறல், கண் எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதையும் அரசு சுட்டிக்காட்டியுள்ளது. 30 குழுக்கள் மூலம் சென்னையில் 15 இடங்களில், போகி பண்டிகையை கண்காணிக்க திட்டமிட்டப்பட்டுள்ளது.
Discussion about this post