ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 192 ரூபாய் உயர்ந்து 24 ஆயிரத்து 600 ரூபாய்க்கும், வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து 42 ரூபாய் 80 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் சில நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.
அதனடிப்படையில் சென்னையில் 22 கேரட் தங்கம் சவரனுக்கு 24 ஆயிரத்து 408 ரூபாய்க்கு விற்பனையான ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 192 ரூபாய் உயர்ந்து 24 ஆயிரத்து 600 ரூபாயிக்கு விற்பனையாகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 3 ஆயிரத்து 75 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து, 42 ரூபாய் 80 காசுகளுக்கும், கிலோ 42 ஆயிரத்து 800 ருபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Discussion about this post