சந்திரயான்-2 செயற்கைக்கோள் மூன்று மாதத்தில் விண்ணில் ஏவப்படும் என இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவர் கே.சிவன் தெரிவித்துள்ளார்.
இந்தாண்டில் இஸ்ரோவின் பணிகளுக்காக 30 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக இஸ்ரோவின் தலைவர் கே.சிவன் கூறியுள்ளார். இதன் மூலம் 23 திட்டங்களைச் செயல்படுத்திட உள்ளதாகவும், சந்திரயான் செயற்கைக்கோளை விண்ணில் ஏவி சாதனைப் படைத்த இந்தியா, தற்போது இரண்டாவது முறையாக சந்திரயான்-2 செயற்கைக்கோளை 3 மாதத்தில் விண்ணில் ஏவ உள்ளதாக தெரிவித்தார். இது விண்ணில் வேறு எந்த செயற்கைக்கோளும் செல்லாத பகுதிக்குச் செல்ல உள்ளதாகவும், மேலும், இந்தாண்டில் உலகிலேயே மிக குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணையை அனுப்பி சோதனை செய்ய உள்ளதாகவும் கூறியுள்ளார். வரும் 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ள ககன்யான் செயற்கைக்கோளில் மனிதனையும் அனுப்பி வைக்க உள்ளதாகவும் சிவன் தெரிவித்தார்.
Discussion about this post