ஆயிரம் ரூபாயுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை பொங்கல் பண்டிகைக்கு முன்னதாகவே பொதுமக்களுக்கு வழங்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பப்பட்டிருக்கும் சுற்றறிக்கையில், நியாய விலை கடைகளில் கடந்த 31ஆம் தேதி அன்று நடைமுறையிலுள்ள அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை கவரில் வைத்து வழங்க கூடாது என அறிவுறுத்திருக்கும் தமிழக அரசு, பொங்கல் பரிசு தொகுப்பை மின்னணு குடும்ப அட்டையில் பதிவு செய்த பிறகு தான் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் மின்னணு குடும்ப அட்டை இல்லாத இனங்களில், அவர்களுக்கு அக்குடும்ப அட்டையில் உள்ள நபர்களின் ஏதேனும் ஒருவரின் ஆதார் எண் அல்லது பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு வரும் OTP அடிப்படையில் பரிசு தொகுப்பை வழங்கலாம் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post