திண்டுக்கலில் இந்தியா இஸ்ரேல் கூட்டு உயர் தொழில்நுட்பத்தில் உற்பத்தி செய்யப்பட்ட ஒரு கோடி காய்கறி நாற்றுகள் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டன.
இந்தியா இஸ்ரேல் கூட்டு உயர் தொழில்நுட்பத்தில் காய்கறி நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. 3 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பசுமை குடில் அமைத்து இந்த காய்கறி நாற்றுகளை உற்பத்தி செய்யப்படுகிறது.இதுவரையில் சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான நாற்றுகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நாற்றுகள் அதிக விளைச்சலை தருவதாகவும் நல்ல லாபம் ஈட்டி தருவதாகவும் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
Discussion about this post