வேளாங்கண்ணியில் பெண் குழந்தையை கொன்று, மற்றொரு குழந்தையுடன் ஆந்திரா சென்ற 2 பேர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்
வேலூர் மாவட்டம் நெல்வாய் கிராமத்தை சேர்ந்த ஜெயந்தி, தமது இரண்டு குழந்தைகள் மற்றும் மாமனார் கோபாலகிருஷ்ணனுடன் கடந்த வாரம் வேளாங்கண்ணி சென்றுள்ளார். பின்னர், வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. வேளாங்கண்ணியில் உள்ள விடுதியில் ஜெயந்தியின் ஒரு பெண் குழந்தை அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டது. இந்நிலையில், ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் மற்ற 3 பேரும் ரயிலில் அடிப்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது. வேளாங்கண்ணி விடுதியில் தங்கியிருந்த போது, ஒரு குழந்தையை கொன்றுவிட்டு உடலை அங்கேயே விட்டு விஜயவாடா சென்றுள்ளனர். அங்கு, மற்றொரு குழந்தையுடன் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. குழந்தைகளை கொல்வதற்கு காரணம் என்ன, ஏன் விஜயவாடா சென்றனர் என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Discussion about this post