ஏற்கெனவே திட்டமிட்டிருந்தபடி, சந்திராயன் 2 விண்கலம், நாளை விண்ணில் ஏவப்படாது என தகவல் வெளியாகியுள்ளது.
சந்திராயன் திட்டத்தின் மூலம், நிலவுக்கு விண்கலம் அனுப்பி வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து, நிலவின் தரையில் இறங்கி ஆய்வு செய்யும் வகையில், ஆய்வூர்தியுடன் விண்கலம் அனுப்பும் சந்திராயன்-2 திட்டத்தை, இஸ்ரோ செயல்படுத்த உள்ளது. ஏற்கெனவே இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட சந்திராயன் 2 திட்டத்தை, ஜனவரி 3-ம் தேதி செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டிருந்தது. ஆனால் 2018ம் ஆண்டின் பிற்பாதியில் செயற்கைக்கோள்களை ஏவும் பணி தொடர்ச்சியாக நடைபெற்றதால், சந்திராயன் 2 திட்டத்தை செயல்படுத்துவது தாமதமாவதாக கூறப்படுகிறது. இதனால், திட்டமிட்டிருந்தபடி நாளை சந்திராயன் 2 ஏவப்படாது என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து, இன்னும் ஓரிரு நாட்களில் இஸ்ரோ முடிவு செய்ய உள்ளதாக தெரிகிறது. இந்த திட்டத்தில், விண்கலம் மட்டுமல்லாமல், சிறிய அளவில் ரோபோ போன்ற ‘ரோவர்’ ஒன்றும் அனுப்பப்பட இருக்கிறது.
Discussion about this post