திருவண்ணாமலை அருகே, சாமந்திப் பூவின் விலை வீழ்ச்சி மற்றும் பூச்சி தாக்குதலால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
கீழ்பென்னாத்தூர் அடுத்த லாடவரம் கிராமத்தில், பருவமழை குறைவு காரணமாக, சில விவசாயிகள் பூ சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆறு மாதத்திற்குள் சாகுபடி செய்யப்படும் சாமந்தி பூ பயிருக்கு, குறைந்தளவு தண்ணீரும் உரமும் இருந்தால் போதுமானது என்று விவாசயிகள் கூறினர். கடந்த ஆண்டு ஏக்கருக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வரை லாபம் பார்த்ததாக தெரிவித்த அவர்கள், இந்தாண்டு விலை வீழ்ச்சியானது கவலையடையச் செய்துள்ளது என்றனர். கடந்தாண்டு ஒரு கிலோ சாமந்திப் பூ, 100 ரூபாய் வரை விலைபோனதாகவும், தற்போது 10 முதல் 15 ரூபாய் வரை தான் விலை கேட்கப்படுவதாக வேதனை தெரிவித்தனர்.
Discussion about this post