இயற்கை வளங்களுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு நாளை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தித்தொகுப்பை காணலாம்…
இயற்கை வளங்களை பயன்படுத்துவது மட்டுமல்ல நமது கடமை அதனை பேணிக்காப்பதும் நமது
கடமை தான். பிளாஸ்டிக் பொருட்களால் இயற்கை வளங்கள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு அழிந்து வரும்நிலையில் சுற்றுச்சூழலை பாதுகாக்க தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கையே பிளாஸ்டிக் மீதான தடை.நாளை முதல் 100க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பொருட்களில் 14 வகையான பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பட்டியலில்,
* பிளாஸ்டிக் தாள்கள்
* பிளாஸ்டிக் தெர்மாகோல் தட்டுகள்
* பிளாஸ்டிக் பூசிய பேப்பர் கப்
* பிளாஸ்டிக் தேநீர் கப்
* பிளாஸ்டிக் டம்ளர்
* பிளாஸ்டிக் தண்ணீர் பாக்கெட்டுகள்
* பிளாஸ்டிக் உறிஞ்சிகள்
* பிளாஸ்டிக் கைப் பைகள்
* பிளாஸ்டிக் லேசான, தடிமன் பைகள்
* பிளாஸ்டிக் கொடிகள்
* பிளாஸ்டிக் முலாம் பூசப்பட்ட பைகள்
* பிளாஸ்டிக் சுருக்குப் பைகள்
உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக அறிவிக்கப்பட்டுள்ள பொருட்களாக
* வாழை இலைகள்
* அலுமினிய பேப்பர்கள்
* பேப்பர் சுருள்கள்
* தாமரை இலைகள்
* கண்ணாடி, உலோக டம்ளர்கள்
* பேப்பர் உறிஞ்சிகள்
* மூங்கில், பலகையிலான டம்ளர்கள்
* பேப்பர், துணிக் கொடிகள்
* பீங்கான் சாதனங்கள்
* மண்பாண்டங்கள்
* மண்பானைகள்
ஆகியவைகள் இடம்பெற்றுள்ளன.
தற்போது அத்தியாவசியமாக நாம் பயன்படுத்தி வரும் பிளாஸ்டிக் பொருட்களான தட்டுகள், டம்ளர்கள் ஆகியவை கரும்பு சக்கைகள் மூலமாகவும் காகித பேப்பர்கள் மூலமாக தயார் செய்யப்பட்டு வருகிறது. இதுபோன்ற பொருட்கள் எளிதாக மக்கும் இயற்கையும் பாதுகாக்க வழியாகும்.
பிளாஸ்டிக் கழிவுகளில் அதிகமாக பாலிதீன் பைகள் முக்கிய அங்கம் வகிக்கின்றன. தெரு ஓரங்களிலும், நீர் நிலைகளிலும் பாதிப்பை உடனடியாக ஏற்படுத்துவது இதுபோன்ற பாலீதின் பைகளே. இதற்கு மாற்றாக பழங்காலத்தில் இருந்து தயாரிக்கப்பட்டது தான் துணி பைகள் தற்போது நவீன உற்பத்தி மூலமாக விற்பணைக்கு வந்துள்ளது. இதனையும் மக்கள் ஆர்வமாக வாங்கி செல்கின்றனர். நாளை முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு மக்களும் இயற்கையை பாதுகாக்க ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
Discussion about this post