பருத்தியை நேரடியாக தமிழக அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் 400க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை நல்ல முறையில் பெய்ததால் முதலாம் பறிப்பு முடிந்து, இரண்டாம் பறிப்பு தொடங்கியுள்ளது. திருப்பூரில் ஆடை தயாரிக்கும் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளதால், ஒரு குவிண்டால் பருத்தி 5 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகிறது. இந்தநிலையில் பருத்தியை நேரடியாக தமிழக அரசு கொள்முதல் செய்து விற்பனை செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Discussion about this post