ரயிலில் கற்பூரம் ஏற்றினால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது.
ரயில்வே சட்டத்தின் படி எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களான எரிவாயு, பெட்ரோல் உள்ளிட்டவைகளை கொண்டுச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் சிலர் ரயிலில் கற்பூரம் ஏற்றி வழிபடுவதாக புகார்கள் எழுந்தன. இந்தநிலையில் பாதுகாப்பு காரணங்களை சுட்டிக் காட்டி ரயில்களில் கற்பூரம் ஏற்றக்கூடாது என ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதனை மீறி கற்பூரம் ஏற்றினால் அவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ள ரயில்வே துறை, விதிகளை மீறுவோர் குறித்து பயணச்சீட்டு பரிசோதகர் அல்லது 182 என்ற எண்ணை தொடர்புக்கொண்டு புகார் அளிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.
Discussion about this post