மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து கஜா நிவாரண நிதி குறித்து பேசியதாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.
பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை, அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி. வேலுமணி ஆகியோர் டெல்லியில் சந்தித்து பேசினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் வேலுமணி, உள்ளாட்சி நிதி மற்றும் கஜா புயல் நிவாரண நிதியை மத்திய அமைச்சரிடம் கோரியதாகவும், வியாழக்கிழமை மத்திய உள்ளாட்சித் துறை அமைச்சர் தோமரை சந்தித்து நிதி கோரவுள்ளதாகவும் தெரிவித்தார்.
கஜா புயலுக்கு தமிழக அரசு அதிகளவு நிதியை அறிவித்துள்ளது என்று தெரிவித்த அமைச்சர், தமிழகத்துக்கு அதிக நிதியை மத்திய அரசு அளிக்க வேண்டும் என கூறினார். சந்திப்பின்போது தேர்தல் கூட்டணி தொடர்பாக பேசவில்லை என்றும் அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்
Discussion about this post