வரும் ஜனவரி 1-ம் தேதி பிளாஸ்டிக் தடை உத்தரவு அமலுக்கு வர உள்ள நிலையில், தடையை கண்காணிக்க 10 ஆயிரம் தனிப்படைகளை தமிழக அரசு அமைத்துள்ளது.
மக்காத பிளாஸ்டிக் பொருட்களுக்கு 2019 ஜனவரி 1-ம் தேதி முதல் தமிழகத்தில் பயன்படுத்த தடைவிதித்து, கடந்த ஜூன் 5-ம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்கள் தடையை கண்காணிக்க 10 ஆயிரம் தனிப்படைகளை தமிழக அரசு அமைத்துள்ளது. ஒரு தனிப்படைக்கு 5 ஊழியர்கள் வீதம் 50 ஆயிரம் பேர் இந்த கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
உள்ளாட்சி, சுற்றுச்சூழல் துறையை சேர்ந்த அதிகாரிகள் மாவட்ட வாரியாக இதை கண்காணிக்க உள்ளனர். அதன் அடிப்படையில், ஜனவரி 1-ம் தேதி முதல் அதிரடி சோதனைகள் தொடங்கும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post