உடல்நலமும் மனநலமும் நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றது என்பார்கள்… மக்களின் துயரங்களை மறக்கடிக்கும் வகையில் தூய்மையாய் அமைந்திருக்கும் அம்மா பூங்கா குறித்த சிறப்பு தொகுப்பை தற்போது காண்போம்…
கரூர் மாவட்டம் திருக்காம்புலியூரில் அமைந்திருக்கும் அம்மா பூங்காவுக்கு பிரத்யேகமான பல சிறப்புகள் உண்டு… ரம்மியமாக காட்சியளிக்கும் மாயனூர் கதவணை… செல்லாண்டியம்மன் கோயில் என ஒருங்கிணைந்த இயற்கை சூழல்… 49 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தமிழக அரசு சார்பில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இந்த அம்மா பூங்கா தான் சுற்றுவட்டார மக்களின் பொழுதுபோக்கு களம்… குழந்தைகளுக்கு சொர்க்கம்… காலை பூங்காவுக்குள் நுழைந்தால் மாலை வரை அங்கு அமைக்கப்பட்டிருக்கும் விளையாட்டு உபகரணங்களில் விளையாடி மகிழ்கின்றனர் குழந்தைகள்…
மான், முயல் போன்ற விலங்குகளின் பொம்மைகள் ஒருபுறம் இருந்தாலும் வண்ண வண்ண மீன்கள் அங்கு வருவோரின் மனதை கொள்ளையடிக்கிறது… மக்களின் உடல்நலத்தை கருத்தில் கொண்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்… உடனுக்குடன் குப்பைகள் அகற்றம் என சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது… சுய மரியாதையுடன் வாழ நினைக்கும் பெண்களுக்கும் இந்த பூங்கா உறுதுணையாக உள்ளது… மகளிர் சுய உதவி குழுவின் மூலம் அம்மா பூங்காவில் இயங்கும் ஆவின் விற்பனை நிலையம் பெண்களின் முன்னேற்றத்திற்கு சான்று பயக்கும்…
அம்மா பூங்காவுக்கு தேவையான மின்சாரம் சூரிய ஒளியின் மூலம் பெறப்படுவது இதன் தனிச்சிறப்புகளுள் ஒன்று… முன் மாதிரியாக திகழும் இந்த பூங்கா போன்று தமிழகம் முழுவதும் அமைக்கப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு…
Discussion about this post