வாக்காளர் பட்டியலில் சென்னை மாவட்டத்தில் உள்ள மாற்று திறனாளிகளின் பெயர் சேர்க்க வீடுவீடாக சென்று தகவல் சேகரிக்கப்பட்டதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது
சென்னை மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள் தாமாகவோ அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமாகவோ தங்களுடைய முகவரி மற்றும் வாக்காளர் அடையாள அட்டை விவரங்களை பெருநகர சென்னை மாநகராட்சி கட்டணமில்லா தொலைபேசி எண் 1913 ல் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுநாள்வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காத மாற்றுத்திறனாளிகள் தங்களுடைய விவரங்களை தெரிவித்தால், அவர்களின் இல்லத்திற்கே சென்று வாக்குச்சாவடி நிலை அலுவலர் படிவம் 6 ஐ வழங்கி பூர்த்தி செய்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மாற்றுத்திறனாளிகள் குறித்த விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் தேர்தல் நேரத்தில் சிறப்பான சேவை அளிப்பதற்காகவே இந்த விவரங்கள் சேகரிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது
Discussion about this post