இலங்கையின் வடக்கு மாகாணத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் தொடர்ந்து கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மாங்குளம், இரணைமடு உள்ளிட்ட நீர் நிலைகளில் வெள்ளம் நிரம்பி வழிகின்றன.தொடர்ந்து பெய்துவரும் மழையால் ஏற்பட்டுள்ள இந்த வெள்ளப்பெருக்கால், முல்லைத் தீவுக்குச் செல்லும் முக்கிய சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.இந்த வெள்ளப்பெருக்கால் 5 மாவட்டங்களை சேர்ந்த 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கிய 8 ஆயிரத்தி 539 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் 52 பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சியில் இதுவரை 400 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் இருநூற்றி 12 ஹெலிகாப்டர்கள்,விமானங்கள், படகுகள் ஈடுபட்டுள்ளன.வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க அதிபர் சிறிசேனா உத்தரவிட்டுள்ளார். மீட்புப்பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.
Discussion about this post