அரியலூர் ஜெயங்கொண்டம் அருகே தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட திடக்கழிவு உர தொழிற்சாலையில், இடிந்து விழும் நிலையில் இருக்கும் ராட்சத துருப்பிடித்த தூண்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம் புதுகுடி கிராமம் செந்துறை சாலையில் ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட 21 வார்டுகளிலும் சேகரிக்கப்பட்ட குப்பைகளை மறுசுழற்சி செய்வதற்காக செங்குந்தபுரம் அருகே புதுக்குடி ஊராட்சியில் 7 கோடியே 22 லட்சம் மதிப்பீட்டில்
தூய்மை இந்தியா திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் உர கிடங்கு அமைக்கப்பட்டது.
15 அடி ஆழத்திற்கு அடித்தளம் அமைத்து பெரிய ராட்சத தூண்கள் அமைக்கப்பட்டு முடிக்க வேண்டிய இந்தப் பணிகள், பொதுமக்களின் எதிர்ப்பால் பாதியில் நிறுத்தப்பட்டது. இந்தநிலையில், பெரிய ராட்சத தூண்கள் துருப்பிடித்து இடிந்து விழும் நிலையில் உள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே, ராட்சத தூண்களை அகற்றவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Discussion about this post