வங்க கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த பகுதி குறித்து, பொதுமக்களுக்கு உடனுக்குடன் தகவல் அளிக்கப்படும் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். சென்னை எழிலகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை அவசர கட்டுப்பாட்டு மையத்தில், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
தென்மேற்கு வங்க கடலில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக கூறினார். இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழகம் இடையே கரையை கடக்க உள்ளதாகவும், இதனால் 14,15 ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, அவர் குறிப்பிட்டார். காற்றழுத்த தாழ்வு நிலை குறித்து மக்களுக்கு உடனுக்குடன் தகவல் அளிக்கப்படும் எனவும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
Discussion about this post