மத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்க வருமாறு காங்கிரசுக்கு ஆளுநர் ஆனந்தி பென் படேல் அழைப்பு விடுத்துள்ளார்.
230 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைக்க 116 இடங்களில் வெற்றி பெற வேண்டும். தற்போது காங்கிரஸ் கட்சி 114 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக 109 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.பகுஜன் சமாஜ் கட்சி 2 தொகுதியில் வெற்றிபெற்ற நிலையில், அக்கட்சி ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சியமைக்கிறது.
இந்நிலையில் ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு காங்கிரஸ் தரப்பில் ஆளுநருக்கு நேற்று கடிதம் எழுதப்பட்டது. இதற்கு பதில் அளித்த ஆளுநர் ஆனந்தி பென் படேல், அதிகாரப்பூர்வ முடிவுகள் வரும் வரை காத்திருக்குமாறு தெரிவித்தார். இந்நிலையில் தற்போது காங்கிரசை ஆட்சி அமைக்க வருமாறு ஆனந்தி பென் படேல் அழைப்பு விடுத்துள்ளார்.
Discussion about this post