பாஜகவுக்கு எதிரான கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்பதற்காகவும், சோனியா காந்தியைச் சந்திப்பதற்காகவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தனது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இந்த நிலையில், மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். சோனியா காந்தியை அவரது இல்லத்தில் காலை 11.30-மணியளவில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து கூறுகிறார். பாஜகவுக்கு எதிரான கட்சிகளின் கூட்டம் டெல்லியில் வரும் 10ம் தேதி நடைபெற உள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராகுல் காந்தி கூட்டத்துக்குத் தலைமை வகிக்கிறார். இந்தக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலினும் பங்கேற்க உள்ளார்.
Discussion about this post