கரூர் அருகே காவிரி ஆற்றில் 490 கோடி ரூபாய் மதிப்பில் கதவணை அமைய உள்ள இடத்தை, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு செய்தார்.கரூர், நாமக்கல் மாவட்டங்களுக்கு இடையே உள்ள காவிரி ஆற்றின் குறுக்கே, சுமார் 490 கோடி ரூபாய் மதிப்பில் கதவணை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
ஆயிரத்து 140 மீட்டர் நீளத்தில் அமைய உள்ள இந்த கதவணையால், வாங்கல் மற்றும் மோகனூர் வாய்க்கால் மூலம் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் கதவணை அமைய உள்ள இடத்தில், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முதற்கட்ட ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மண்ணின் உறுதித் தன்மை குறித்து மூன்று மாதத்தில் ஆய்வு முடிக்கப்பட்டு, மூன்று ஆண்டுகளில் கதவணை அமைக்கும் பணி நிறைவடையும் எனத் தெரிவித்தார்.
Discussion about this post