சபரிமலை விவகாரத்தை முனவைத்து கேரள சட்டப் பேரவையில் சபாநாயகரை முற்றுகையிட்டு காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் சபரிமலை, பம்பை உள்ளிட்ட இடங்களில் தடை யுத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து பக்தர்களின் வருகை குறைந்துள்ளது.
இந்நிலையில் கேரள சட்டப்பேரவையில் சபரிமலை விவகாரம் தொடர்ந்து எதிரொலித்து வருகிறது. பேரவைக் கூட்டம் ஆரம்பித்தது முதலே சபரிமலை விவகாரத்தை கையிலெடுத்து, எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
அதன்படி, 8-வது நாளான இன்றும் அவை கூடியதும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு முழக்கத்தில் ஈடுபட்டனர். சபரிமலை விவகாரத்தில் மாநில அரசின் நடவடிக்கைகளை கண்டித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு நிலவியது.
Discussion about this post