பாகிஸ்தான் நிகழ்ச்சியின் போது காலிஸ்தான் தலைவருடன் புகைப்படம் எடுத்த சித்துவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி வலியுறுத்தியுள்ளார்.
பாகிஸ்தானின் ராவி ஆற்றங்கரையில் உள்ள கர்தாபூர் குருநானக் குருத்துவாராவுக்கு இந்தியாவில் இருந்து சாலை அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று முன்தினம் கர்தாபூரில் நடைபெற்றது. இதில், அந்த நாட்டு பிரதமர் இம்ரான்கான் பங்கேற்றார்.
இந்த விழாவில் கலந்து கொண்ட பஞ்சாப் மாநில அமைச்சர் சித்து, காலிஸ்தான் பிரிவினைவாத ஆதரவாளர் கோபால் சிங் சாவ்லாவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், காலிஸ்தான் தலைவருடன் புகைப்படம் எடுத்த சித்துவை கைது செய்ய வேண்டும் என்றும் அவர் மீது தேச துரோக சட்டத்தின் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும் சுப்பிரமணிய சுவாமி வலியுறுத்தியுள்ளார்.
Discussion about this post