புயல் பாதித்த பகுதிகளில் நியாய விலை கடைகள் திறக்கப்பட்டு, பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருவதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில், நிவாரணப் பணிகளை துரிதமாக செயல்படுத்தவும், உடனடியாக உதவிகளை வழக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
புயல் பாதிப்புக்குள்ளான சுமார் 151 கிராமங்களில் நடைபெற்று வரும் மறுசீரமைப்பு பணிகளில் 210 பொக்லைன் இயந்திரங்கள், 213 மரம் அறுக்கும் இயந்திரங்கள் பயன்படுத்தபட்டு வருவதாகவும் துணை முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கு 10 ஆயிரம் லிட்டர் பால் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும், 3 டன் பால் பவுடர் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள 216 நியாய விலைக் கடைகள் திறக்கப்பட்டு அத்தியாவசிய பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
Discussion about this post